காபாவில் மலக்கு (?)

18 10 2010

அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள்.

திருக்குர்ஆன் 2:3

முஸ்லிம்கள் ஈமான் கொள்ள வேண்டிய மறைவான விஷயங்களில் ஒன்று மலக்குகள்
இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டும். அவர்கள் மனிதர்களின் கண்களுக்கு புலப்படமாட்டார்கள். சிலர் ஓளிச்சிதறலை வைத்து காஃபாவின் மீது மலக்கு (?) இருப்பதைப் போல் சித்தரித்து ஒரு videoவை வெளியிட்டுள்ளனர்.

மலக்குகளை இப்படி மனிதர்களின் கண்களுக்குத் தெரியும் வகையில் அனுப்புவதாக இருந்தால் காபிர்கள் கேட்டார்களே, அப்போதே
அல்லாஹ் அனுப்பியிருப்பான். மனிதர்களை நபிமார்களாக அனுப்பிய போது நிராகரிப்பவர்கள் கூறியதைப் பாருங்கள் :

‘இவருடன் வானவர் இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?’ என அவர்கள் கூறுகின்றனர்.

திருக்குர்ஆன் 6:8

அவரது சமுதாயத்தில் (ஏக இறை வனை) மறுத்த பிரமுகர்கள் ‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர்
விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான்.
முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை’ என்றனர்.

திருக்குர்ஆன் 23:24

‘இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில்
நடமாடுகிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர்
எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?’ என்று கேட்கின்றனர்.

திருக்குர்ஆன் 25:7

‘அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள்!’ என்று (போதிக்க) அவர்களுக்கு முன்னரும், அவர்களுக்குப் பின்னரும் மக்களிடம் தூதர்கள் வந்தனர். அதற்கவர்கள் ‘எங்கள் இறைவன் நினைத்திருந்தால் வானவர்களை
இறக்கியிருப்பான். எனவே எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்’ எனக் கூறினர்.

திருக்குர்ஆன் 41:14

அதற்கு அல்லாஹ்வின் பதிலைப் பாருங்கள் :

வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம்.
எதில் குழம்பிப் போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

திருக்குர்ஆன் 6:9

மலக்குகள் அவர்களுக்கென நியமிக்கப்பட்ட வேலையைச் சரியாக செய்பவர்கள். அந்த வேலைகள் அல்லாமல் வேறு பணிக்காக இறைவன் மலக்குகளை அனுப்புவதாக
இருந்தால் அநியாயக்காரர்களை அழிக்கவே அனுப்புவான். காஃபாவின் மீது படுத்துக் கிடக்கவெல்லாம் அனுப்பவே மாட்டான்.

‘இவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா?’ என அவர்கள் கூறுகின்றனர்.
வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டு விடும். பின்னர்
அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்
.

திருக்குர்ஆன் 6:8

மலக்குகளை இதற்கு முன்பு பார்த்திருந்தால் தான் இது மலக்கு என்பதை சொல்ல
முடியும். மலக்குகள் இறக்கைகளோடு இருப்பர் என்பதை மட்டும் வைத்துக்
கொண்டு இதை உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தை
வைத்து எதையும் வடிவமைக்கலாம்.

மலக்குகள் அல்லாஹ் நியமித்த பணியை செய்வதை தவிர வேறு வேலை எதையும் செய்ய
மாட்டார்கள். காஃபாவின் மேல் படுத்துக் கிடக்கும் மலக்கு என்று
குர்ஆனிலும் இல்லை ஹதீஸிலும் இல்லை.

மலக்குகளை படம் பிடிக்க முடியும் என்றால் ஒவ்வொரு மனிதனின் நன்மை தீமைகளை
பதிவு செய்யும் மலக்குகளை படம் பிடித்திருக்க முடியுமே, அல்லாஹ்வின்
ஆணைப்படி நம்மை பாதுகாப்பதற்காக நம் கூடவே இருக்கும் மலக்குகளை
பிடித்திருக்க முடியுமே, ஏதோ காஃபாவில் மட்டும் தான் மலக்குகள் இருப்பது போல் இந்த படத்தில் போட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தான் மலக்குகள் உள்ளனர். அதையெல்லாம் படம் பிடிக்க முடியுமா ?

இப்போது ஏன் அது போல் மலக்கு வரவில்லை.

இது போன்று எப்படியும் வடிவமைக்கலாம் என்பதை உணர்த்தும் வேறு விதமான படங்கள் :

இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

மார்க்கத்தைப் பரப்பக் கூட முஸ்லிம்கள் பொய் சொல்வதற்கு அனுமதி இல்லை. ஆனால் சில முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்றால், தக்காளியில் அரபு
எழுத்து, மீனில் அரபு எழுத்து இவைகளையெல்லாம் அற்புதம் என்கின்றனர்.
இறந்தது போல் ஒரு கொடூர உருவத்தைப் போட்டு இது ஓமனில் ஒருவருக்கு ஏற்பட்ட
கப்ர் வேதனை என்கின்றனர், பள்ளிவாசலின் மேற்கூரை பறக்கிறது என்கின்றனர்.

இதனால் இஸ்லாத்தை பெருமைப்படுத்தலாம் என நினைக்கின்றனர். எதையும் நம்பும்
சில முஸ்லிம்கள் வேண்டுமானால் இதை நம்பிக் கொண்டு திரியலாம். இந்த பொய்களால் மாற்று மத சகோதரர்களிடம் இஸ்லாத்தின் மதிப்பு குறையவே செய்யும்.

அல்லாஹ்வின் அற்புதங்கள், அத்தாட்சிகள் எவ்வளவோ இருக்கும் போது இத்தகைய
பொய்களைப் பரப்புவதால் என்ன லாபம்?. நாம் அனைவரும் பின்வரும் நபிமொழியை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவர் தாம் கேள்விப்பட்டதை எல்லாம் (ஆராயாமல் பிறருக்கு) அறிவிப்பதே
அவர் பொய்யர் என்பதற்குப் போதுமான சான்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 6

எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காப்பானாக…

சகுனம் பார்த்தல்

10 03 2010

ஜோதிடம் , நல்லநாள் , கெட்டநாள் , நட்சத்திரம் பார்த்தல் , சகுனம்
பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது.

நாட்களிலோ,நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதும்
கிடையாது. முற்றிலும்
தீமை பயக்கக் கூடியதும் கிடையாது.

எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை
அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாள்
நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும்
சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ ,
துக்கமோ நிம்மதியின்மையோ ஏற்படக்கூடாது. இப்படி ஒரு நாள் கிடையாது என்பது சாதாரண உண்மை.

எந்த நாள் கெட்டநாள் என்று சிலரால்
ஒதுக்கப்படுகின்றதோ அந்நாளில் குழந்தை பாக்கியம்பெற்றவர்கள் , பொருள்
வசதியடைந்தவர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய
வரலாற்றிலிருந்து கூட
இதற்கொரு உதாரணத்தைக் கூறலாம்.

முஹர்ரம் மாதம்
பத்தாம் நாள் ஃபிர்அவ்ன்
அழிக்கப்பட்டு , மூஸா (அலை) அவர்கள்
காப்பாற்றப்பட்டனர்.

அதே முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுஸைன் (ரலி)
படுகொலை
செய்யப்பட்டார்கள்.

மூஸா நபி காப்பாற்றப்பட்டதால்
அதை நல்ல நாள் என்பதா ?

ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதால்
அதைக் கெட்ட நாள் என்பதா ?

நாட்களுக்கும் , நல்லது கெட்டது ஏற்படுவதற்கும்
எந்தச்சம்மந்தமுமில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

‘ இந்தக் காலங்களை மக்களிடையே நாம்
சுழலச் செய்கிறோம் ‘.

அல்குர்ஆன் 3 :140

சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும் , மேல்பகுதி கீழே செல்லும். இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டு
சிலரை மேலாகவும் சிலரைக்கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்ள வேண்டியவற்றில் விதியும் ஒன்றாகும்.

‘ நன்மை தீமை யாவும்
அல்லாஹ்விடமிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும் நான் நம்புகிறேன் ‘ என்ற உறுதி மொழி எடுத்த முஸ்லிம் நாள் நட்சத்திரம் பார்ப்பது அந்த உறுதிமொழிக்கு முரணாகும்.

ஒரு நாள் , நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ இருக்குமானால் அதை அல்லாஹ்
தான் அறிவான். அவன் அறிவித்தால் தவிர
எவராலும் அறிய முடியாது.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இன்னின்ன நாட்கள் நல்லநாட்கள் என்று கூறவில்லை.
அல்லாஹ்வின் தூதரும்
கூறவில்லை.

அல்லாஹ்வும் , அவனது தூதரும் கூறாததை மற்றவர்களால்எப்படி அறிய முடியும் ?

இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்லநாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு
மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன்
எழுதியதைப்பார்த்து நல்ல நாட்களைத்
தீர்மானிக்கிறோம்.

நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான்
என்று அறிந்து கொண்டான் ? இதைச்
சிந்திக்க வேண்டாமா ?

வருங்காலத்தில்
நடப்பதை அறிவிப்பதாகக் கூறுவதும் சோதிடமும்
ஒன்று தான்.

ஒரு மந்திரவாதியிடம்(?) ஹஜ்ரத்திடம் சென்று எனக்கு நல்லநாள் ஒன்றைக் கூறுங்கள்
என்று கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால்
அவனது நாற்பது
நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.

நூல் : முஸ்லிம் 4137

யாரேனும் சோதிடனிடம் சென்று அவன்
கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு
அருளப்பட்ட மார்க்கத்தை அவன்
நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.

நூல் : அஹ்மத் 9171

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
உலகத்துக்கெல்லாம் நல்லநாள் கணித்துக் கூறக்கூடியவகளின் நிலைமையைப்
பாருங்கள்!

வறுமையிலும் , தரித்திரத்திலும் வீழ்ந்து கிடப்பதையும் , மக்களிடம் யாசித்து உண்பதையும் நாம்
காணலாம்.

இவர்கள் தங்களுக்கு என்று விஷேசமான
நல்லநாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள
முடிந்ததா ? இது ஒரு பித்தலாட்டம் என்பது இதிருந்தே தெளிவாகவில்லையா ?

முஸ்லிம்கள் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் எந்த நல்ல
காரியங்களையும்
செய்யலாம். நாள் நட்சத்திரம் , சகுனம் , ஜோதிடம் ஆகிய
அனைத்திலிருந்தும் விலகிக்கொள்வது அவசியமாகும்.

ஸவ்ர் குகையில் சிலந்தி வலையா ?

26 02 2010

ஸவ்ர் குகையில் நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர்(ரலி)
அவர்களும் இருந்த போது அல்லாஹ்
அவர்களை சிலந்தி வலையின் மூலம்
காப்பாற்றினான் என்று உலமாக்களால்
பயான் செய்யப்படுகிறது.

இது கட்டுக்கதை .இந்த
செய்தி முஸ்னத்அஹ்மத் 3246, தப்ரானி மூஜமுல்
கபிர் 12155 ல் பதிவாகியுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள
உஸ்மான் அல் ஜஸ்ரி இவர் யாரென
அறியப்படாதவர்.

மேலும் இந்த செய்தி தப்ரானி கபிரில்
1082ல் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள
அபூகஹ்சப், அவுனு இப்னு அம்ர் இருவரும்
அறியப்படாதவர்கள்.

அதை விட இதை நம்புவது குர்ஆனுக்கே எதிரானதாகும்.
அவர்களை காப்பாற்றியது எப்படி என்று அல்லாஹ்
குர்ஆனில் கூறுகின்றான்.

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு)
உதவி செய்யாவிட்டாலும் (ஏக
இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக
வெளியேற்றிய போதும், அவ்விருவரும்
அக்குகையில் இருந்த போதும், ‘நீர்
கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன்
இருக்கிறான்’ என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும்
அவருக்கு அல்லாஹ்
உதவியிருக் கிறான்.
தனது அமைதியை அவர்
மீது இறக்கினான். நீங்கள்
பார்க்காத படைகளின் மூலம் அவரைப்
பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின்
கொள்கையைத் தாழ்ந்ததாக அவன்
ஆக்கினான். அல்லாஹ்வின்
கொள்கையே உயர்ந்தது.
அல்லாஹ் மிகைத்தவன்;
ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:40

இந்த வசனத்தில் பார்க்க முடியாத படையின் மூலம் காப்பாற்றியதாக
அல்லாஹ் கூறுகிறான். சிலந்தி வலை பார்க்க
கூடியதே. எனவே இதன் மூலம் காப்பாற்றவில்லை
என்பது தெளிவாகிறது.

இந்த வசனத்தில் பார்க்க முடியாத படை என்பது மலக்குகளை தான். இதற்கு ஏற்றாற் போல்
ஒரு ஹதீஸ் உள்ளது.

ஸவ்ர் குகையில்
இருக்கும் போது அபூபக்கர்(ரலி) அவர்கள்,
நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே
எதிரிகள் நம்மை நெருங்கி விட்டார்கள்.
நம்மை பார்த்து விடுவார்களோ ?” எனக்
கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்
“கவலைப்படாதீர். வானவர்கள் தங்கள்
இறகுகளால் எதிரிகள் நம்மை பார்க்காத
வண்ணம் தடுத்து உள்ளனர்” எனக்
கூறினார்கள்.
அப்போது எதிரிகளில் ஒருவன் குகையின் பக்கம் இருவரும் பார்க்கும் படி
சிறுநீர் கழிந்தான். அப்போது அபூபக்கர்
ரலி அவர்கள் “எதிரி நம்மை நோக்கி
சிறுநீர் கழிக்கிறான் ஆனால் நம்மை அவர்கள் பர்க்கவில்லை” எனக்
கூறினார்கள்.

இந்த செய்தி தப்ரானி கபிர் 24வது volume ல் 106 வது ஹதீஸாக
பதிவாகியுள்ளது.

எனவே அல்லாஹ்
குர்ஆனில் கூறிய படி ஸவ்ர் குகையில்
மலக்குகள் மூலம் காப்பாற்றினான் என்று நம்புவோம்.

இதை விடுத்து சிலந்தி
வலை மூலம் காப்பாற்றியதாக
கூறப்படும் கட்டுக்
கதையை நம்பினால் குர்ஆனை மறுத்த பாவத்திற்கு ஆளாக வேண்டிய நிலை வரும்.

ஒற்றுமை எனும் கயிறு

23 02 2010

https://i1.wp.com/www.findyourfate.com/astrology/quran.jpg

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும்
சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள்
பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ்
உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப்
பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால்
சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின்
விளிம்பில் இருந்தீர்கள்.
அதிலிருந்து உங்களைக்
காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக
இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ்
தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 3:103

தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் மேடைகளில்
தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில
மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப்
பிடித்துக் கொள்ளுங்கள்’
என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்
வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால்
ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும் என்றும் இதன்
அடிப்படையில்
வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை.

ஓர் ஊரில் அனைவரும்
சினிமா பார்த்தால்,
வரதட்சணை வாங்கினால்
அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா?
என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

‘அல்லாஹ்வின்
கயிற்றை அனை வரும்
சேர்ந்து பிடியுங்கள்’ என்று தான் இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வின்
கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபிமொழிகளும்
தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபிவழியைப் பற்றிப்
பிடியுங்கள் எனக் கூறும்
வசனமே இது.

‘குர்ஆன், ஹதீஸில்
உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால்
ஒற்றுமை கெடுகின்றது;
எனவே அதைச் சொல்லாதீர்கள்’ என்று இவர்கள் நேர்மாறான
விளக்கத்தைத் தருகின்றனர்.

அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம்
பிடியை விட்டு விடக் கூடாது.

அவர்களையும்
பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.

Thanks: P.J

இஸ்ராயீல்????

29 01 2010

‘மனிதர்களின் உயிர்களைக் கைப்பற்றிட இஸ்ராயீல்’ என்ற வானவரை அல்லாஹ்
நியமித்திருக்கிறான்; அவர் தான் உயிர்களைக் கைப்பற்றுகின்ற
வானவர்’ என்று பரவலாக நம்புகிறார்கள்.

ஆனால் இஸ்ராயீல்’ என்ற பெயரில் வானவர் இருக்கிறார் என்று திருக்குர்ஆனிலோ, நபிகள்நாயகம்(ஸல்) அவர்களின்
போதனைகளிலோ எந்தக் குறிப்பும் இல்லை.

ஒரே ஒரு வானவர் தான்
அனைவருடைய உயிரையும்
கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் எந்தச் சான்றும் இல்லை.

திருக்குர்ஆனை நாம்
ஆய்வு செய்து பார்த்தால்
ஒவ்வொரு மனிதனின் உயிரைக்
கைப்பற்றுவதற்கும் தனித் தனியான
வானவர்கள் இருப்பதாக பின்வரும் வசனம் கூறுகிறது.

‘உங்களுக்கென
நியமிக்கப்பட்ட
மரணத்திற்குரிய வானவர் உங்களைக்
கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்’
என்றுகூறுவீராக!

திருக்குர்ஆன் 32:11.

அதிகமான மக்களைப் பற்றி பன்மையாகப் பேசும் போது ‘அவர்களின்
உயிர்களை வானவர்கள்
கைப்பற்றுவார்கள்’ என்று பன்மையாகவே கூறப்படுகிறது.

நம்முடைய தூதர்கள்
அவர்களின் உயிர்களைக்
கைப்பற்றுவார்கள் என்று பின்வரும்
வசனங்களிலும் பன்மையாகக்
கூறப்படுவதைக் காணலாம்.

“அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன்.
உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள்.
அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61.

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட,அல்லது அவனது வசனங்களைப்
பொய்யெனக் கருதியவனை விட மிகப்
பெரிய அநீதி இழைத்தவன் யார் ?
விதிக்கப்பட்ட அவர்களின் பங்கு அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களைக்
கைப்பற்ற நமது தூதர்கள்
அவர்களிடம் வரும் போது ” அல்லாஹ்வை விட்டு விட்டு நீங்கள் யாரை அழைத்துக்
கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே ?”
என்று கேட்பார்கள். ”
எங்களை விட்டும் அவர்கள் மறைந்து விட்டனர் ” என அவர்கள் கூறுவார்கள். ” நாங்கள்
(ஏக இறைவனை) மறுப்போராக இருந்தோம்
” எனத் தமக்கு எதிராகச்
சாட்சி கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 7:37.

மேலும் உயிரைக் கைப்பற்றும் வானவர்கள் பலர் உள்ளனர் எனக்
கூறும் திருக்குர்ஆன் வசனங்கள்:

அவர்களின் முகங்களிலும், பின்
புறத்திலும் அடித்து வானவர்கள் அவர்களைக் கைப்பற்றும் போது எப்படி இருக்கும்?

திருக்குர்ஆன் 47:27.

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன்,
தனக்கு (இறைவனிட மிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும்
எனக்கு அறிவிக்கப்படுகிறது ‘
எனக்கூறுபவன், அல்லாஹ் அருளியதைப்
போல் நானும் இறக்குவேன்’ என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி
இழைத்தவன் யார் ?
அநீதி இழைத்தோர் மரணத்தின்
வேதனைகளில் இருக்கும் போது நீர்
பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள் . ‘உங்கள்
உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்!
அல்லாஹ்வின் பெயரால்
உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும் ,
அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்று இழிவு தரும்
வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள் !’ (எனக்கூறுவார்கள்).

திருக்குர்ஆன் 6:93.

தமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள்
கைப்பற்றும் போது , ‘நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை’ என்று அவர்கள் சமாதானம்
பேசுவார்கள் . அவ்வாறில்லை!
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன் .

திருக்குர்ஆன் 16:28.

நல்லோராக இருக்கும்
நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள்
கைப்பற்றி , ‘உங்கள்
மீது ஸலாம் உண்டாகட்டும்! நீங்கள்
செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில்
நுழையுங்கள் !’ என்று கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 16:32.

தமக்குத் தாமே தீங்கு இழைத்துக்
கொண்டோரின் உயிர்களை வானவர்கள்
கைப்பற்றும் போது, ”நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்கள்?” என்று
கேட்பார்கள். ”நாங்கள் பூமியில் பலவீனர்களாக இருந்தோம்” என்று இவர்கள் கூறுவார்கள். ”அல்லாஹ்வின்
பூமி விசாலமானதாக இல்லையா? அதில் நீங்கள் ஹிஜ்ரத் செய்திருக்கக் கூடாதா?”
என்று (வானவர்கள்) கேட்பார்கள். இவர்கள்
தங்குமிடம் நரகம். அது கெட்ட தங்குமிடம்.

திருக்குர்ஆன் 4:97.

( ஏக இறைவனை) மறுப்போரின்
முகங்களிலும் , முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது ,
” சுட்டெரிக்கும் வேதனையை
அனுபவியுங்கள்! ” என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே!

திருக்குர்ஆன் 8:50.

அனைவருடைய உயிரையும்
கைப்பற்றுவதற்கு ஒரே ஒரு வானவர் தான் இருக்கிறார்’ என்ற
நம்பிக்கை தவறானது என்பதை மேலே கண்ட
வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஒவ்வொரு மனிதருக்கும்
அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு வானவரை அல்லாஹ்
நியமித்திருக்கிறான்.
எப்போது கைப்பற்ற வேண்டும் என்ற
உத்தரவு வருகிறதோ அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார்
என்பது தான் குர்ஆனிலிருந்தும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கவுரை யிலிருந்தும்
கிடைக்கின்ற முடிவாகும்.

ஒரு வானவர் உலகத்திலுள்ள
அனைவருடைய உயிர்களையும் கைப்
பற்றும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்
கின்றார் என்று சொல்லப்படுவதற்கு மார்க்கத்தில் எந்தச் சான்றும் இல்லை.

எனவே இஸ்ராயீல் என்ற
கற்பனை மலக்கை மறந்து உயிரைக்
கைப்பற்றும் வானவர்கள்
பலர் என்றும் ஒவ்வொரு உயிரைக் கைப்பற்ற,
ஒவ்வொரு வானவரை அல்லாஹ்
நியமித்துள்ளான் என்று கூறும் திருக்குர்ஆனின்
வசனங்களை நம்புவோம்.

அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்ட
போதுமானவன்.

786 என்பதைப் பயன்படுத்தலாமா ?

25 01 2010

நியூமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவர்.
அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சிலர்
எண்களைக் குறியீடுகளாகப்
பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1 ,
பே 2 , ஜீம் 3 , தால் 4)

‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ‘
என்பதில் இடம் பெற்ற ஒவ்வொரு எழுத்தின் எண்களையும் மொத்தமாகக்
கூட்டினால் 786 வரும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
என்பதன் சுருக்கமாகக் கருதி இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய அடிப்படையில் இது ஏற்க முடியாததாகும்.
எண்கள் எழுத்துக்களாக முடியாது.

அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்குப்
பதிலாக 238 என்று சொன்னால் அதை எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

ஒருவர் 6236 வசனங்களைக் கொண்ட
குர்ஆனை ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் தொகை எண்ணைப் பயன்படுத்தினால் அவர்
குர்ஆனை ஓதியவர் என்று கருதப்பட
மாட்டார்.

அது போல் 786 என்று சொன்னால் அல்லது எழுதினால் அவர்
பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம் சொன்னவராகவும் ,
எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786 என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது.

மோசமான அர்த்தங்கள்
கொண்ட வார்த்தைகளுக்கும் கூட
இதே எண் வரலாம்.
ஹரே கிருஷ்ணா என்பதை எண்கள்
அடிப்படையில் கூட்டினால் அதன்
தொகையும் 786 தான்.

அப்துல் கபூர்
என்பதற்குப் பதிலாக 618 என்று
அழைத்தால் அதை அப்பெயருடையவர்
விரும்ப மாட்டார்.

அவ்வாறிருக்க
அல்லாஹ்வின்
திருப்பெயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்வைக் கேலி
செய்வதாகும். அவனது திருப்பெயர்களை அப்படியே எழுதுவது தான் உண்மை
முஸ்லிமுக்கு அழகாகும்.

முஸ்லிமல்லாதவர்கள் கையில் கிடைத்தால் அதன் புனிதம் கெட்டு விடும் என்றெல்லாம்
இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க
முடியாததாகும்.

ஏனெனில் காபிராக
இருந்த ஒரு பெண்ணுக்கு சுலைமான்
(அலை) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின்
பால் அழைக்கும் போது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம் ‘ என்று அவர்கள்
எழுதியுள்ளார்கள்.
( பார்க்க :
அல்குர்ஆன் 27 :30)

நபிகள் நாயகம்(ஸல்)
பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச்
செய்த கடிதத்தின் துவக்கத்திலும்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ‘
என்றே எழுதியுள்ளனர். (பார்க்க :
புகாரி 7 , 2941 , 4553)

நாமும் அது போல் முழுமையாக
பிஸ்மில்லாஹிர்
ரஹ்மானிர் ரஹீம் ‘
என்றே எல்லா நேரத்திலும் எழுத
வேண்டும்.

ஸஃபர் மாதம் பீடை மாதமா ?

19 01 2010

இஸ்லாமிய மார்க்கம்
பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால்
இன்று முஸ்லிம்கள் தங்கள்
செயல்பாடுகளால் இஸ்லாத்தைப்
பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத் தோற்றுவித்து விட்டனர்.

குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள்கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும்
தடுக்காத அளவுக்கு “இஸ்லாம் தடை செய்துள்ளது”.

ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக்
காரியங்களை முஸ்லிம்களே பால் கிதாபு,பார்வை பார்த்தல் என்ற பெயர்களில்
செய்து வருகின்றனர்.

இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக,
முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில்
ஒன்று தான் “ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம்” என்று கருதுவதாகும்.

இன்று முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப்
பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த
மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச்
சென்று மூழ்கி வருகிறார்கள்.

இன்னும் பலர் புல்வெளிகளுக்குச்
சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.
ஸஃபர் குளி என்ற பெயரில் ஆற்றில்
போய் குளித்து பீடையை(?) நீக்குகின்றனர்.

இன்னும் சிலர் மாவிலைகளில்
“சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்”
என்ற திருக்குர்ஆனின்
வசனத்தை எழுதி அதனை நீரில்
கரைத்துக் குடிப்பார்கள்.
இவ்வாறு குடித்தால்
தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும்(?) என்று கருதுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக,
பீடையைப் போக்குவதற்காகக் கொழுக்கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் (?) தலையில்
கொட்டுவார்கள்.

இது போன்று ஏராளமான மூடநம்பிக்கைகளை மாற்று மதத்திரிருந்து காப்பி அடித்துள்ளார்கள்.
மேலும் ஸஃபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத்
தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க
முடிகிறது.

இன்று ஸஃபர் மாதம்
பீடை மாதமாக கருதப்படுவதைப்
போன்று அன்று அரபியர்களிடத்தில்
“ஷவ்வால் மாதமும் ஸஃபர் மாதமும்”
பீடையாகக் கருதப்பட்டது.

பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும்
வண்ணமாக, தன்னை நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில் தான் உடலுறவும் கொண்டார்கள்
என்று ஆயிஷா (ரலி)
அறிவிக்கின்றார்கள்.
(நூல் : முஸ்லிம்2782)

ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். இதற்காகத்தான்

நபி (ஸல்) அவர்கள் “ஸஃபர் என்பது நீங்கள் நினைப்பது போல்
பீடை இல்லை” என்று கூறினார்கள்.
(நூல் : அபூதாவூத் 2414)

ஸஃபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த
ஆதாரமும் இல்லை. மாறாக ஸஃபர்
மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக்
கூடாது என்று தான் உள்ளது.

தொற்று நோயும், பறவைச் சகுனமும்,
ஸஃபர் மாதம்
பீடை என்பதும்
கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 5707

ஸஃபர் மாதம் வந்து விட்டால் அதில்
சோதனைகளும், குழப்பங்களும்
அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட
நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸஃபர் மாதம்
பீடை மாதம் இல்லை என்று கூறினார்கள்.

கெட்ட நாள் உண்டா?

காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும். உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப்
பொருத்துத் தான் இறைவனால்
தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப்
பொருத்து அல்ல.

எல்லா மனிதர்களுக்கும்
நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை.
எல்லா மனிதர்களுக்கும்
தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.

உலகத்துக்கு நல்ல நாள்
பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல
நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக
அனைவரும் தரித்திர நிலையில் தான்
உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்
படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள்
என்று கூறுவது அல்லாஹ்வைக்
குறை கூறுவதாகும்.

“ஆதமுடைய மகன்
என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன்
காலத்தைத் திட்டுகின்றான். என்
கையிலே ஆட்சியுள்ளது.
இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்”
என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 4826

எனவே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின்
அதிருப்திக்குரிய செயலாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில்
எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல
துயரங்களுக்கு ஆளானார்கள்.

என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள்
தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக
கடற்கரைக்கோ அல்லது புல்மிதிப்பதற்கோ சென்றார்களா? என்றால்
இல்லை.

பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும்.
“அல்லாஹ்வைத் தவிர” வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம்
விளங்கிக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால்
அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில்
நாடியோருக்கு அதை அளிப்பான். அவன்
மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன்.
(அல்குர்ஆன் 10:107)