இஸ்லாமியத் திருமணத்தில் தவிர்க்கப்படவேண்டியவை

7 04 2010

திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக்
காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும்
அந்த சடங்குகளுக்கும் எந்தச்சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத்
தவிர்க்க வேண்டும்.

* தாலி கட்டுதல்

* கருகமணி கட்டுதல்

* ஆரத்தி எடுத்தல்

* குலவையிடுதல்

* திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக்
கட்டியணைத்து வாழ்த்துதல்

* ஆண்களும் பெண்களுமாக
மணமக்களைக் கேலி செய்தல்

* வாழை மரம் நடுதல்

* மாப்பிள்ளை ஊர்வலம்

* ஆடல், பாடல்,
கச்சேரிகள் நடத்துதல்

* பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.

* முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.

* தலைப்பிரசவச் செலவை பெண்
வீட்டார் தலையில் சுமத்துவது.

* பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.

பிற மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட
இந்தக் கொடுமைகள் கண்டிப்பாகத்
தவிர்க்கப்பட வேண்டும்.

யார் பிற சமயக்
கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும்
அவர்களைச் சேர்ந்தவர்
என்பது நபிமொழி.

நூல்: அபூதாவூத் 3512

அன்பளிப்பு ,மொய்:

திருமணத்தின் போதும், மற்ற சமயங்களிலும்
உற்றாரிடமிருந்தும்,
நண்பர்களிடமிருந்தும் அன்பளிப்புப்பெறுவது இஸ்லாத்தில்
அனுமதிக்கப்பட்டதாகும்.

ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும்,
எதிர்பார்க்காமலும்
கிடைக்குமேயானால்
அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும்.
ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் அதீ (ரலி)

நூல்: புகாரி 1380, 6630

அன்பளிப்புகளை மறுக்கலாகாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது.

மொய் என்றும் ஸலாமீ என்றும் கூறப்படும்
போலித்தனமான அன்பளிப்புகள்
கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒரு பொருளைக் கொடுத்து விட்டு தங்களுக்கு அது திரும்பக்கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே மொய் என்பது அமைந்துள்ளது. கொடுத்து விட்டு திரும்பிப் பெற எண்ணும் போது அது அன்பளிப்பாகாது.

அன்பளிப்புச் செய்து விட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன் வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவனைப் போன்றவன் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1490,2589, 2621, 2623,3003,6975

இந்த வெறுக்கத்தக்க
போலி அன்பளிப்புகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

நன்றி:பீஜே


செயற்பாடுகள்

தகவல்
%d bloggers like this: