தரீக்காவின் திக்ருகள்

25 03 2010

https://i1.wp.com/img.youtube.com/vi/YrfTncxpz4U/0.jpg

சபையில் வட்டமாக அமர்ந்து லாயிலாஹ
இல்லல்லாஹ் 100 தடவை பின்னர் எழுந்து நின்று
ஒருவருக்கொருவர் கைகளைக் கோர்த்துக்
கொண்டு அல்லாஹ் என்று 100 தடவை
அஹ் ‘ என்று 100
தடவை கூறுகிறார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பாடுகிறார்கள்.
ஒவ்வொருவரும் ஆடுவதால் கழுத்து ,
வயிறு , தோள்பட்டை ஆகியவை சுருங்கி சுருங்கி விரிகின்றன.

இதை நடத்தி வைக்க
ஒருவர் தமது உள்ளங்கைகளைத்
தரையை நோக்கி வைத்து கைகளை வேகமாக அசைத்து
திக்ருக்கு வேகமூட்டுகிறார்.

திக்ரு முடிந்ததும் சபையில் இருந்த
அனைவரும் அவருடைய கைகளை முத்தமிடுவதற்காக
முண்டியடித்துக்
கொண்டு வருகின்றனர்.

இதில் காணப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நபிவழியா ? இந்தக்
கூத்துக்கள் திருக்குர்ஆனுக்கும் ,
நபிவழிக்கும் முரணானவை.

இந்த திக்ரு பற்றி விரிவாக நாம் அலச வேண்டும்.

உமது இறைவனைக் காலையிலும் ,
மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும் அச்சத்துடனும் சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக!
கவனமற்றவராக ஆகி விடாதீர்!

அல்குர்ஆன் 7:205

பணிவோடு தான் திக்ரு செய்ய வேண்டும் என்று இவ்வசனம்
கட்டளையிடுகிறது. இந்தக் கட்டளைக்கு மாற்றமாக ஆடிக்
கொண்டும் , பாடிக்
கொண்டும் , கைகால்களை உதறிக்
கொண்டும் டான்ஸ் ஆடுகின்றனர்.
இதில் கடுகளவாவது பணிவு இருக்கிறதா என்று யோசியுங்கள்.

மனதிற்குள்ளும் ,
உரத்த சப்தமின்றியும்
திக்ரு செய்யுமாறு இவ்வசனத்தில்
இறைவன்
கட்டளையிடுகிறான். இந்த திக்ரோ பகிரங்கமாகவும் , பயங்கரசப்தத்துடனும்
நடத்தப்படுகின்றது.

அல்லாஹ்வின்
பள்ளியில் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக
அல்லாஹ்வை திக்ரு செய்கிறார்கள். இது இறைவனுக்கு
ஆத்திரமூட்டுமா ?
அன்பை ஏற்படுத்துமா ?
என்று சிந்தித்துப் பாருங்கள்!

இறைவனை திக்ரு செய்கிறோம் என்ற
பெயரில் மனிதர்கள் இயற்றிய பாடல்களைப்
பக்திப் பரவசத்துடன் மெய் மறந்து பாடுகின்றனர். மனிதனின்
வார்த்தைகளை
வணக்கமாகக் கருதுவதற்கு எந்த
ஆதாரமும் இல்லை.

இறைவனுக்கென்று அழகிய திருநாமங்கள் உள்ளன. அந்தத்
திருநாமங்களைக்
கூறியே இறைவனை அழைக்க வேண்டும் ; திக்ரு செய்ய வேண்டும்.

அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது
ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும்
அவனுக்கு அழகிய
பெயர்கள் உள்ளன என்று கூறுவீராக! உமது பிரார்த்தனையைச் சப்தமிட்டும் செய்யாதீர்! மெதுவாகவும்
செய்யாதீர்! இவ்விரண்டுக்கும்
இடைப்பட்ட வழியைத் தேடுவீராக!

அல்குர்ஆன் 17 :110

அல்லாஹ்வுக்குரிய
அழகிய திருநாமங்களில் அஹ் ‘ என்றொரு நாமம் இருக்கிறதா ? நிச்சயமாக இல்லை. அஹ் என்பது அல்லாஹ்வின் திருநாமம் இல்லை என்றால் இவர்கள்
யாரை திக்ரு
செய்கிறார்கள் ?

சம்மந்தப்பட்டவர்களிடம் இது பற்றிக் கேட்டால்
அவர்கள் கூறுகின்ற விளக்கம் என்ன
தெரியுமா ? அல்லாஹ் என்ற திருநாமத்தில் முதல் எழுத்தையும் , கடைசி எழுத்தையும்
சேர்த்து சுருக்கமாக அஹ் ‘ என்று
கூறுகிறார்களாம். இப்படி அவர்கள் விளக்கம் தருகிறார்கள்.

அல்லாஹ்வின்
பெயரை இவ்வாறு திரிக்க அனுமதி இருக்கிறதா ?

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம்
பிரார்த்தியுங்கள்!
அவனது பெயர்களில்
திரித்துக்கூறுவோரை விட்டு விடுங்கள்!
அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

அல்குர்ஆன் 7 :180. ‘

அல்லாஹ் ‘ என்பதை அஹ் ‘ என்று திரித்துக்
கூறும் இவர்களைத் தன்னிடம் விட்டு
விடுமாறும் அவர்கள்
தண்டனை வழங்கப்படுவார்கள்
என்றும் இங்கே இறைவன் எச்சரிக்கிறான்.

இந்தக் கடுமையான
எச்சரிக்கையை அலட்சியம் செய்து விட்டு , இறைவனின் திருநாமத்தில்
விளையாடுவது திக்ராகுமா ? என்று
சிந்தியுங்கள்!

அப்துல் ரஹ்மான் என்று பெயரிடப்பட்ட ஒருவர் அன் ‘ என்று
அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதில்லை. இப்ராஹீம் என்று பெயரிட்டவர் இம் ‘
என்று அழைக்கப்படும்
போது ஆத்திரம் கொள்கிறார். சாதாரண
மனிதர்களே இவ்வாறு இருக்கும் போது யாவற்றையும் படைத்த
கண்ணியத்திற்குரிய அல்லாஹ் இதை எப்படி ஏற்றுக் கொள்வான் ?

மேலும் அந்த ஹல்காவில்(சபையில்) பாடப்படும் பாடல்கள்
இஸ்லாத்தின்
அடிப்படையைத் தகர்க்கும் வகையிலும் , இறைவனைக் கேலி செய்யும் வகையிலும்
அமைந்துள்ளன. ஹா! ஹா! ஹா! என்று சினிமா வில்லன்கள்
சிரிப்பது போன்று
அர்த்தமில்லாத
உளறல்களை திக்ரு என்று பாடுகின்றனர்.

இந்த திக்ரு கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதற்கும் ,
மார்க்கத்திற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.


செயற்பாடுகள்

Information
%d bloggers like this: