ஸவ்ர் குகையில் சிலந்தி வலையா ?

26 02 2010

ஸவ்ர் குகையில் நபி(ஸல்) அவர்களும் அபூபக்கர்(ரலி)
அவர்களும் இருந்த போது அல்லாஹ்
அவர்களை சிலந்தி வலையின் மூலம்
காப்பாற்றினான் என்று உலமாக்களால்
பயான் செய்யப்படுகிறது.

இது கட்டுக்கதை .இந்த
செய்தி முஸ்னத்அஹ்மத் 3246, தப்ரானி மூஜமுல்
கபிர் 12155 ல் பதிவாகியுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள
உஸ்மான் அல் ஜஸ்ரி இவர் யாரென
அறியப்படாதவர்.

மேலும் இந்த செய்தி தப்ரானி கபிரில்
1082ல் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள
அபூகஹ்சப், அவுனு இப்னு அம்ர் இருவரும்
அறியப்படாதவர்கள்.

அதை விட இதை நம்புவது குர்ஆனுக்கே எதிரானதாகும்.
அவர்களை காப்பாற்றியது எப்படி என்று அல்லாஹ்
குர்ஆனில் கூறுகின்றான்.

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு)
உதவி செய்யாவிட்டாலும் (ஏக
இறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக
வெளியேற்றிய போதும், அவ்விருவரும்
அக்குகையில் இருந்த போதும், ‘நீர்
கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன்
இருக்கிறான்’ என்று அவர் தமது தோழரிடம் கூறிய போதும்
அவருக்கு அல்லாஹ்
உதவியிருக் கிறான்.
தனது அமைதியை அவர்
மீது இறக்கினான். நீங்கள்
பார்க்காத படைகளின் மூலம் அவரைப்
பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின்
கொள்கையைத் தாழ்ந்ததாக அவன்
ஆக்கினான். அல்லாஹ்வின்
கொள்கையே உயர்ந்தது.
அல்லாஹ் மிகைத்தவன்;
ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 9:40

இந்த வசனத்தில் பார்க்க முடியாத படையின் மூலம் காப்பாற்றியதாக
அல்லாஹ் கூறுகிறான். சிலந்தி வலை பார்க்க
கூடியதே. எனவே இதன் மூலம் காப்பாற்றவில்லை
என்பது தெளிவாகிறது.

இந்த வசனத்தில் பார்க்க முடியாத படை என்பது மலக்குகளை தான். இதற்கு ஏற்றாற் போல்
ஒரு ஹதீஸ் உள்ளது.

ஸவ்ர் குகையில்
இருக்கும் போது அபூபக்கர்(ரலி) அவர்கள்,
நபி(ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே
எதிரிகள் நம்மை நெருங்கி விட்டார்கள்.
நம்மை பார்த்து விடுவார்களோ ?” எனக்
கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள்
“கவலைப்படாதீர். வானவர்கள் தங்கள்
இறகுகளால் எதிரிகள் நம்மை பார்க்காத
வண்ணம் தடுத்து உள்ளனர்” எனக்
கூறினார்கள்.
அப்போது எதிரிகளில் ஒருவன் குகையின் பக்கம் இருவரும் பார்க்கும் படி
சிறுநீர் கழிந்தான். அப்போது அபூபக்கர்
ரலி அவர்கள் “எதிரி நம்மை நோக்கி
சிறுநீர் கழிக்கிறான் ஆனால் நம்மை அவர்கள் பர்க்கவில்லை” எனக்
கூறினார்கள்.

இந்த செய்தி தப்ரானி கபிர் 24வது volume ல் 106 வது ஹதீஸாக
பதிவாகியுள்ளது.

எனவே அல்லாஹ்
குர்ஆனில் கூறிய படி ஸவ்ர் குகையில்
மலக்குகள் மூலம் காப்பாற்றினான் என்று நம்புவோம்.

இதை விடுத்து சிலந்தி
வலை மூலம் காப்பாற்றியதாக
கூறப்படும் கட்டுக்
கதையை நம்பினால் குர்ஆனை மறுத்த பாவத்திற்கு ஆளாக வேண்டிய நிலை வரும்.


செயற்பாடுகள்

தகவல்
%d bloggers like this: