அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பு சகோதரர்களே, எமது இணையதளம் சம்பந்தமான உங்கள் கருத்துக்களை இந்த பகுதியில் பதியுங்கள்..
Cannot load blog posts at this time.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹும்ம ! அன்த்த ரப்பீ. லா இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க, வ வஅதிக்க மஸ்ததஅத்து. அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஅத்து. அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ லக்க பி தன்பீ. ஃபஃக்பிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக்பிருத் துனூப இல்லா அன்த்த
என்று ஒருவர் கூறுவதே தலைசிறந்த பாவ மன்னிப்புக் கோரலாகும்.
பொருள்: யா அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன்.
நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மேலும், நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறெவரும் இல்லை.
யார் இந்தப் பிரார்த்தனையை நம்பிக்கை யோடும் தூய்மையான எண்ணத்தோடும் பகலில் கூறிவிட்டு அதே நாளில் மாலை நேரத்திற்கு முன்பாக இறந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். யார் இதை நம்பிக்கையோடும் தூய்மையான எண்ணத்தோடும் இரவில் கூறிவிட்டுக் காலை நேரத்திற்கு முன்பே இறந்து விடுகின்றாரோ அவரும் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்.
அறிவிப்பாளர் : ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
நூல்: புகாரி 6306
![]() |
அனைத்து தவ்ஹீத் சகோதரர்கள் |
குழுமத்தில் இணைய |
![]() |
ரவ்லாதுல்ஜன்னாஹ் |
குழுமத்தில் இணைய |
அஸ்ஸலாமு அலைக்கும். இணையதள சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள். எங்களுடைய தமிழ் தவ்ஹீத்.காம் இணையதளத்தை தங்கள் இணையத்தளத்துடன் (லிங்க் LINK பகுதியில்) இணைத்துக் கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம். மிக்க நன்றி…
இப்படிக்கு,
தமிழ் தவ்ஹீத்.காம்.
இது இஸ்லாத்தின் ஏகத்துவ கொள்கையை அதன் தூயவடிவில் பரப்பிட செயல்படும் தமிழ் இணையதளம்.
தொடர்புகளுக்கு:
Website:
http://www.tamilthowheed.com
Email:
tamilthowheed@gmail.com
Facebook:
http://www.facebook.com/tamil.thowheed
Twitter:
https://twitter.com/TamilThowheed
Admin reply:
வஅலைக்கும் ஸலாம். தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோதரரே…
இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவுகள் அருமை….. இனியும் இது தொடரட்டும் இன்ஷா அல்லாஹ்……
அன்பு நண்பர்களே இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகளுக்கு பதில்தேட திருவாளப்புத்தூர் முஸ்லீம் பாருங்கள். அந்த தளத்தில் இணையுங்கள்…. உங்கள் கருத்துகளை பதியுங்கள்….
புதிய பதிவுகள்: நபிகள் நாயகம் (ஸல்) vs தலைவர்கள்-(பகுதி 1), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி-சூடான விவாதம்
Admin reply:
அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோதரரே…
தங்களின் இந்த இணையத்தளம் மிகச்சிறப்பாக வடிவமைத்து உள்ளீர்கள். மிகவும் அருமையான ஆக்கங்கள் , பயனுள்ள இணையதள முகவரி, மற்றும் இஸ்லாமிய உலகம் சார்ந்த அனைத்தும் ஒரே இடத்தில தர நீங்கள் செய்த முயற்சிக்கு வல்ல அல்லாஹ் வெற்றி கொடுத்திருக்கிறான் அல்ஹம்துலில்லாஹ் ….
இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்…
சீனி இப்ராகிம் – இருமேனி – ராமநாதபுரம்
Admin reply:
அஸ்ஸலாமு அலைக்கும். தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோதரரே…
தென்னிந்தியாவில் பல முஸ்லீம் நண்பர்கள் திருமணத்தில் பங்கு கொண்டிருக்கிறேன். ஆனால், தாங்கள் வேண்டாம் என்று சொல்லும் காரியங்கள் நடைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதனை கலாச்சார ரீதியில் ஏன் தாங்கள் ஏற்கக் கூடாது? உதாரணத்திற்காக, முஸ்லீம்-தாலி / சரடு / தொங்கட்டான் ரெடிமேடாக பல நகைக் கடைகளில் கிடைக்கின்றன. முஸ்லீம்கள் வாங்கி அணிந்து கொள்கின்றனர். சீதக்காதி திருமண வாழ்த்து என்ற நூலில் மணமகனே மணமகளுக்குத் தாலி கட்டியுள்ளதாக உள்ளது. இதைப் பற்றிய தங்கள் கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
Admin reply:
அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் வேதபிரகாஷ் அவர்களே, முஸ்லிம்கள் செய்பவற்றை நாங்கள் மார்க்கமாக ஏற்க மாட்டோம்.
எங்களது அடிப்படை:
மார்க்கம் என நாங்கள் செய்யவேண்டுமானால் அதை அல்லாஹ் கூறியிருக்கவேண்டும். அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கவேண்டும்.
இந்த அடிப்படையின்றி நாங்களாக ஏதேனும் செய்வோமேயானால் இது எங்கள் நம்பிக்கைப்படி பாவக் கணக்கில் சேரும்.
இஸ்லாமிய திருமண சடங்குகளில் இன்று நடப்பவைகள் அல்லாஹ்வும், நபி(ஸல்) அவர்களும் சொல்லாதது. எனவே தான் நாங்கள் அவைகளைக் கூடாது என்கிறோம்.
இஸ்லாமியக் கொள்கைகளைப் பற்றி தெளிவாக அறிய :
பார்க்க 1, பார்க்க 2, பார்க்க 3, பார்க்க 4
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோதரரே…
அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களுடைய website link ஐ குரான், ஹதீஸ் தகவல் கேட்கும் சில சகோதரர்களுக்கு, உங்களுடைய அனுமதி இல்லாமல் அனுப்பி விட்டேன். அதற்காக தற்போது உங்களுடைய அனுமதியை கேட்கிறேன்.
வஸ்ஸலாம்.
Admin reply:
வஅலைக்கும் ஸலாம். சகோதரரே, இதில் தப்பாக நினைக்க ஒன்றுமே இல்லை. நீங்கள் தாராளமாக weblink ஐ கொடுக்கலாம். நீங்கள் weblink ஐ கொடுத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.
தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோதரரே…